கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நடிகை கண்மணியிடம் அனுமதி கேட்டு தாலி கட்டிய காதலன்!

திருமணத்தின்போது தாலி கட்டுவதற்கு முன்பு காதலியிடம் அனுமதி கேட்டு அஷ்வத் தாலி கட்டிய விடியோ வைரல்.

கண்மணி மனோகரன் - அஷ்வத் திருமணம் - இன்ஸ்டாகிராம்

Updated On :

சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன் - தொகுப்பாளர் அஷ்வத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதன் விடியோ மற்றும் புகைப்படங்களை கண்மணி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த கண்மணி, இன்று தனது காதலன் அஷ்வத்தை திருமணம் செய்துகொண்டதற்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்தின்போது தாலி கட்டுவதற்கு முன்பு தனது காதலியிடம் அனுமதி கேட்டு அஷ்வத் தாலி கட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

திருமணத்தின்போது கண்மணி மனோகரன் -  அஷ்வத்

திருமணத்தின்போது கண்மணி மனோகரன் - அஷ்வத் - இன்ஸ்டாகிராம்

கண்மணியின் காதல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன். அந்தத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலனை ரசிகர்களுக்கு கண்மணி அறிமுகப்படுத்தினார். சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா, உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் அஷ்வத்தை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் கடந்த ஜூன் மாதம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பகிர்ந்திருந்தனர்.

நிச்சயதார்த்த புகைப்படங்களுக்கு, இவர்களின் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

நடிகை கண்மணி மனோகரன் - தொகுப்பாளர் அஷ்வத்

நடிகை கண்மணி மனோகரன் - தொகுப்பாளர் அஷ்வத் - இன்ஸ்டாகிராம்

தாலிகட்ட அனுமதி கேட்ட அஷ்வந்த்

திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து, திருமண வேலைகளில் கண்மணியும் அஷ்வத்தும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக திரைப்பிரபலங்கள் பலரையும் சந்தித்து தங்களின் திருமண அழைப்பிதழை வங்கினர்.

திருமண பத்திரிக்கையை நடிகர் விஜய் சேதுபதிக்கும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவி லதா ரஜினிகாந்திடமும் கொடுத்து ஆசி பெற்றனர்.

விஜய் சேதுபதி உடனும், லதா ரஜினிகாந்துடனும்..

விஜய் சேதுபதி உடனும், லதா ரஜினிகாந்துடனும்.. - இன்ஸ்டாகிராம்

இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

திருமணத்தின்போது மணமேடையில் தாலி கட்டுவதற்கு முன்பு, கண்மணி உனக்கு ஓகேவா? என அனுமதி கேட்டு அஷ்வத் தாலிகட்டினார். இந்த விடியோ இணையத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

நீண்ட நாள்களாக காதலித்து திருமணம் செய்ய இருந்தாலும், திருமணத்துக்கு முன்பு, மணப்பெண்ணிடம் அனுமதி கேட்டு தாலி கட்டியுள்ளார் என அஷ்வத்துக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.