இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ஆன்மிகப் பேச்சாளரைக் கரம் பிடித்த நடிகை மிருணாளினி!

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கும் நடிகை மிருணாளினிக்கும் நடைபெற்ற திருமணம் குறித்து...

Spiritual speaker Maha Vishnu, actress Mrinalini

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணு, நடிகை மிருணாளினி - படம் - எக்ஸ்

Updated On :

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கும் நடிகை மிருணாளினிக்கும் நேற்று (நவ. 15) திருமணம் நடந்தேறியுள்ளது.

சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே குருகுலக் கல்வி, பாவ - புண்ணிய பலன்கள் போன்ற தலைப்புகளில் பேசி சர்ச்சைக்குள்ளானவர் ஆன்மிகப் பேச்சாளர் எனக் கூறப்படும் மகா விஷ்ணு.

இதனைத் தொடந்து, அரசுப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். பின்னர், தனது மகாவிஷ்ணு அறக்கட்டளையை மூடுவதாக கடந்தாண்டு அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சூப்பர் டீலக்ஸ், சாம்பியன், எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை மிருணாளினி மகா விஷ்ணுவைக் காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மலேசியாவின் லங்காவி தீவில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை நடிகை மிருணாளினி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும், இந்தத் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Summary

The wedding of spiritual speaker Maha Vishnu and actress Mrinalini took place yesterday (Nov. 15).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.