சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை நடிகை மிருணாளினி ஆன்மிகப் பேச்சாளர் திருமணம் செய்யவிருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே குருகுலக் கல்வி, பாவ - புண்ணிய பலன்கள் போன்ற தலைப்புகளில் பேசி சர்ச்சைக்குள்ளானவர் ஆன்மிகப் பேச்சாளர் எனக் கூறப்படும் மகா விஷ்ணு.
பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வந்த இவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களால் ஒருவர் மாற்றுத்திறனாளியாகப் பிறக்கிறார் என இரு ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் பேசியதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவருடன் மகா விஷ்னு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
இதனைத் தொடந்து மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், தனது மகாவிஷ்ணு அறக்கட்டளையை மூடுவதாக கடந்தாண்டு அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை மிருணாளினியுடன் இவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
நடிகை மிருணாளினி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழில் சாம்பியன், எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு வெளியான ரோமியோ படத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த மிருணாளினி, தற்போது ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை தனது காதலராக அறிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “ஏனென்றால் உன்னை நேசிப்பதில், என்னை நானே நேசிப்பதைப் போன்று உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எப்போதும் உன்னை மட்டுமே நான் தேர்ந்தெடுப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Actress Mrinalini to tie the knot with controversial spiritual speaker!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எங்கு சென்றாலும் தொடர்கிறது... நடிகை த்ரிஷா பதிவால் ரசிகர்கள் சோகம்!

ஒரே சீரியலில் சொந்தமாக கார் வாங்கிய இளம் நடிகை!

விரைவில் திருமணம்! மகள்கள் குறித்து மனம் திறந்த நடிகை மதுபாலா!

கடின உழைப்பின் அடையாளம் ஜீவிதா! சக நடிகையை வாழ்த்திய ஹிமா பிந்து!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




