நடிகர் பிரபுதேவாவின் பரதநாட்டிய நடனத்தை பிரபல நடிகை விமர்சித்துள்ளார்.
நடன மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரபுதேவா. நடன ஆசிரியராகத் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அசத்தலான நடனங்களைக் கொடுத்து 2000-களில் தமிழ் சினிமாவைக் குத்தாட்டம் போட வைத்தார். காதலன், மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன் பாடல்களுக்கு சிறப்பான நடன அசைவுகளைக் கொடுத்து, பலருக்கும் பிரபுதேவா போல் ஆட வேண்டும் என்கிற உத்வேகத்தையும் அளித்தார்.
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்கிற அளவிற்கு திரைத்துறையில் சாதனைகளைச் செய்தவர் என்பதால் பான் இந்திய சினிமா வட்டாரத்தில் பிரபுதேவாவுக்கு பெரிய மரியாதையும் உண்டு.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குரு பூர்ணிமா நாளில் தன்னுடைய நடன குருக்களை மரியாதை செய்யும் விதமாக நிகழ்வொன்றில் பிரபுதேவா பரதநாட்டிய நனடம் ஆடினார். தற்போது, அந்த விடியோ வெளியாகியுள்ளது. இதனைப் பகிர்ந்த நடிகை ப்ரீத்தி சஞ்சீவி , ‘’பாரம்பரிய கலைகளைத் தவறாக ஆடினால் யாரும் கேட்க மாட்டீர்களா? இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா பரதத்தை முறைப்படி ஆடவில்லை. இதனால், மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டார். இது போன்ற வாய்ப்புகளை இவருக்குப் பதில் வேறு இளம் நடனக் கலைஞர்களுக்கு வழங்கியிருக்கலாம்.” எனப் பதிவிட்டார்.
ப்ரீத்தியின் இக்கருத்து பலருக்கும் அதிர்ச்சியை அளித்ததால் பிரபுதேவாவுக்கு ஆதரவான பதிவுகளும் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், 40 ஆண்டுகளாக நடனத் துறையிலிருக்கும் பிரபுதேவா முறையாக பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர்தான்; இந்த நிகழ்வுக்குத் தேவையான அளவு ஆடியிருக்கலாம்... அதற்காக, மன்னிக்க முடியாத குற்றம் என்பது அதிகப்படியாக இருக்கிறது என ப்ரீத்தியையும் விமர்சித்து வருகின்றனர்.
A famous actress has criticized actor PrabhuDeva's Bharatanatyam performance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் காலமானார்!

குஷ்பு மகள் திருமணம்! த்ரிஷாவுக்கு புகைப்படக் கலைஞராக மாறிய பிரபல நடிகை!
விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படம் அறிவிப்பு!

அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபு தேவா?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




