மகா விஷ்ணு - மிருணாளினி திருமண ஆல்பம்
மகா விஷ்ணு - மிருணாளினி திருமண ஆல்பம்

டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை மிருணாளினி ரவியை, மலேசியாவைச் சேர்ந்த ஆன்மிகப் பேச்சாளரான மகா விஷ்ணுவை மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் (நவம்பர் 15) கரம் பிடித்தார்.

லங்காவி தீவில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டெஸ்டினேஷன் வெட்டிங் நிகழ்வின் புகைப்படங்களை மிருணாளினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

காதலர்களாகத் தங்களது பயணத்தைத் தொடங்கிய இருவரும் தற்போது வாழ்க்கைத் துணைகளாக இணைந்துள்ளதாக பதிவு.

தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன், எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்குத் திரைப்படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் மிருணாளினி.

'கத்தலகொண்ட கணேஷ்', 'ஆர்கானிக் மாமா ஹைப்ரிட் அல்லுடு', 'மாமா மசீந்திரா' ஆகிய படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் பிரபலமானார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

