முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! ஜகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு! தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பெரியார் அறிவுலக ஊழல்! ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம் காட்டம்!நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

அனிருத் - காவ்யா திருமண புகைப்படம்! இணையத்தில் வைரல்!

திருமணத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பதிவு குறித்து...

Anirudh shares a photo with his wife, Kavya

அனிருத் - காவ்யா - இன்ஸ்டாகிராம்

Updated On :

திருமணத்திற்குப் பிறகு மனைவி காவ்யா மாறன் உடனான புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிரீஸ் நாட்டில் நேற்று திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், இன்று (நவ. 11) திருமணம் நடைபெற்றுள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து இணையத்தில் ஏஐ விடியோக்கள் பரவி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ புகைப்படத்தை அனிருத் பகிர்ந்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு இன்று (நவ. 11) கிரீஸ் நாட்டில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனிருத்தின் நெருங்கிய சினிமா நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த், மு.க. ஸ்டாலின் உடன் புதுமண ஜோடியின் பெற்றோர்

ரஜினிகாந்த், மு.க. ஸ்டாலின் உடன் புதுமண ஜோடியின் பெற்றோர்

அனிருத் - காவ்யா திருமணம் குறித்து எந்தவொரு புகைப்படமோ விடியோவோ வெளியாகாத நிலையில், தற்போது திருமணம் நடந்த பிறகு முதல்முறையாக மனைவியுடன் ஜோடியாக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அனிருத்.

Summary

Anirudh shares a photo with his wife, Kavya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.