2027 புத்தாண்டில் மறுவெளியீடாகிறது விஜய்யின் பைரவா படம்!
புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ஆம் தேதி மீண்டும் பைரவா திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது குறித்து...

விஜய் - எக்ஸ்
புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ஆம் தேதி மீண்டும் பைரவா திரைப்படம் மறுவெளியீடாகிறது.
தமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான பைரவா திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பி. நாகிரெட்டியாரின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பைரவா.
2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பைரவா திரைப்படம் வெளியான நிலையில், 10 ஆண்டுகள் கழித்து 2027 ஜனவரியில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.
2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான ஐந்து முதல் ஆறு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இதன் மூலம் விஜய்யின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘பைரவா’ இடம்பெற்றது.
2017-ல் இப்படம் வெளியானபோது குழந்தைகளாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது வளர்ந்து இளைஞர்களாகியுள்ள நிலையில், தங்களுக்குப் விருப்பமான ‘பைரவா’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இந்த மறுவெளியீடு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Vijay's film 'Bairavaa' is set for a re-release for the 2027 New Year
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


