
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ஜீவா. பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.
சிவா மனசுல சக்தி போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர், ஆக்சன் படங்களில் நடிக்கத் துவங்கியதும் மார்க்கெட் இழந்தார்.
ஜீவா நடிப்பில் இறுதியான வெளியான படங்களில் சொல்லிக்கொள்ளும் வெற்றியையும் எந்தப் படமும் பெறவில்லை.
தற்போது, பிளாக் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாகத் தகவல்.
பொடென்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கேஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் நாளை (செப்.25) மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!
இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகுமென ஏற்கனவே படக்குழு கூறியிருந்தாலும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.