ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

நடிகர் ராம் சரண் தனது 16ஆவது படத்துக்காக உடல் எடையைக் கூட்டி வருகிறார்.

உடல் எடையை அதிகரிக்கும் நடிகர் ராம் சரண்.

Published On :

நடிகர் ராம் சரண் தனது 16ஆவது படத்துக்காக உடல் எடையைக் கூட்டி வருகிறார்.

தெலுங்கு நடிகர்களில் மிகவும் பிரபல நடிகராக ராம் சரண் இருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம் சரண். இதில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளார்கள். விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

16ஆவது படம்

கேம் சேஞ்சர் படத்துக்குப் பிறகு 16ஆவது படமாக உருவாகும் படத்துக்காக சுமார் 100 கிலோ எடையைக் கொண்ட கதாபாத்திரமாக ராம் சரண் மாறவிருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் உடற்பயிற்சி நிபுணர் ஷிவோகம் உடன் இணைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

ஆர்சி 16 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை உப்பெனா படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்குகிறார்.

17ஆவது படம்

ஆர்சி16க்குப் பிறகு 17ஆவது படத்தில் சுகுமார் இயக்கத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ரங்கஸ்தலம் என்ற படத்தில் இவர்கள் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தினை தயாரிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.