பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து: கோவையில் அறுவைச் சிகிச்சை!

பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து தொடர்பாக....

ram charan

நடிகர் ராம் சரண் - படம்: விடியோ கிளிப்

Published On :

புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நேர்ந்த விபத்து காரணமாக, நடிகர் ராம் சரணுக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக் கவனித்துக் கொள்ளவும் உடன் இருக்கவும் அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவைக்கு வருகை தந்துள்ளனர்.

நடிகர் ராம் சரண், தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

உடனடியாக, மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், எலும்பு மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சைகளுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, நேற்று கோவை வந்தடைந்த ராம் சரணை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

Summary

Actor Ram Charan has been admitted to a private hospital in Coimbatore to undergo wrist surgery following an accident during a film shoot.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.