உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

அரசு மருத்துவரின் அரிய கண்டுபிடிப்புகள்!

மருத்துவச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சைகளின்போது மருத்துவக் குழுவினருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடித்து அவற்றுக்கான காப்புரிமையும் பெற்று வருகிறார் அரசு மருத்துவர் எம். பெரியசாமி.

News image

மருத்துவர் எம். பெரியசாமி

Updated On :19 ஜூலை 2026, 4:01 am IST

மருத்துவச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சைகளின்போது மருத்துவக் குழுவினருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடித்து அவற்றுக்கான காப்புரிமையும் பெற்று வருகிறார் அரசு மருத்துவர் எம். பெரியசாமி.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட கந்தர்வகோட்டை அருகேயுள்ள வளவம்பட்டியைச் சேர்ந்த இவர், ஆலங்குடி வட்டார அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

மருத்துவக் கருவிகள் தயாரித்து மருத்துவத் துறையில் அளப்பரிய பங்களிப்பை மேற்கொண்டு வரும் பெரியசாமியிடம் பேசியபோது:

'தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 1990-இல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றேன். தொடர்ந்து மயக்கவியல், அவசரச் சிகிச்சையில் சிறப்புப் படிப்புகளை முடித்தேன்.

1994 முதல் 1996 வரையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியபோது, நோயாளருக்கும் - அறுவைச் சிகிச்சை கருவிக்குமான இணைப்புக் கருவியாக பெரீஸ் சுவாசக் கருவியைக் கண்டுபிடித்தேன். அதை கொச்சியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் சமர்ப்பித்தேன்.

1996-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறேன். பெரீஸ் லிம்ப் ஹோல்டர், பெரீஸ் மவுத் கேக் ஹோல்டர், பெரீஸ் ஹுமோஸ்டேட்டிக் நேசல் கிளாம்ப், பெரீஸ் நேசல் மாஸ்க், பெரீஸ் மாஸ்க் , பெரீஸ் லெரிங்காஸ்கோப் , பெரீஸ் லேப்ராஸ்கோபி ட்ரொக்கார் கேனுலா, பெரீஸ் ஏர்வே என மொத்தம் 9 மருத்துவக் கருவிகளைக் கண்டறிந்து, முறைப்படி மருத்துவர் மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரையாகச் சமர்ப்பித்து, மலர்களில் வெளியிடச் செய்துள்ளேன்.

இதற்கான காப்புரிமையும் பெற்றிருக்கிறேன். இதுவரை 23 அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்திருக்கிறேன். அவற்றில் மூன்றுக்கு சிறந்த ஆராய்ச்சிக்கான விருது கிடைத்திருக்கிறது.

லிம்ப் ஹோல்டர் - எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சையை இலகுவாக்குகிறது. மவுத் ஹோல்டர் - காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சையில் வாயில் செய்யப்படும் டான்சில் அறுவைச் சிகிச்சை, தொண்டை அறுவைச் சிகிச்சையில் பயன்படுகிறது. ஹுமோஸ்டேட்டிக் நேசல் கிளாம்ப் - மூக்கில் ரத்தம் வழிவதைத் தடுத்து, அதேநேரத்தில் மூக்கு வழியாக சுவாசம் நடைபெற உதவுகிறது. நேசல் மாஸ்க் - மூக்கை மட்டும் மூடி சுவாசிக்க உதவுகிறது.

இதனால் காற்று மாசுவிலிருந்து பாதுகாக்கிறது. கரோனா காலத்தில் மருத்துவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாஸ்க், அறுவைச் சிகிச்சை, அவசர சிகிச்சையின்போது பயன்படும் லெரிங்கா ஸ்கோப் போன்றவையும் பெரிதும் பயன்பட்டன. லேப்ராஸ்கோபி ட்ரொக்கார் கேனுலா என்ற கருவி பணவிரயத்தைத் தடுத்து, குறைந்த நேரத்தில் சிகிச்சையை முடிக்க உதவும் உபகரணமாகும்.

இவையனைத்தும் எனது சொந்த செலவில் உருவாக்கப்பட்டவை. மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் காலத்தில் நமக்கு ஏற்படும் தேவைகளுக்கேற்ப ஒரு கருவியை உருவாக்க முயற்சிப்பேன். அதற்காக மாதக்கணக்கில் அலைய வேண்டிவரும். நான் அதில் வெற்றி பெற்றவுடன், உரிய துறை சார்ந்த மருத்துவ மாநாடுகளில் சமர்ப்பித்து, அதன் மலர்களில் கட்டுரையாகக் கொண்டு வரச்செய்வேன்.

மாநாடுகளில் கண்டுபிடிப்பை சமர்ப்பிக்கும்போதே அதில் பங்கேற்றுள்ள மருத்துவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். இந்தக் கருவிகளால் இக்கட்டான நேரங்களில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. செலவும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் இருந்தால், மருத்துவர்களால் கருவிகளைக் கையாளுவது சுலபமாக இருக்கும்.

எனது கண்டுபிடிப்புகளை அப்துல்கலாம் குடியரசுத்தலைவராக இருந்தபோது கடிதம் வாயிலாக வாழ்த்தினார். 2013-இல் தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவர் விருது, ஆண்களுக்கான குடும்ப நல அறுவைச் சிகிச்சையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 2017-ஆம் ஆண்டு சிறந்த மருத்துவ அலுவலர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்' என்கிறார் பெரியசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.