மறுவெளியீட்டுக்குத் தயாராகிறது கில்லி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்ட உள்ளது.
மறுவெளியீட்டுக்குத் தயாராகிறது கில்லி!

நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்தது கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான கில்லி, ரூ.50 கோடி  வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்து விஜய்யின் மார்கெட்டை அதிகரித்தது.

ஒக்கடுவிலும் கில்லியிலும் வில்லனாக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ், ‘ஹாய் செல்லம்’ என்கிற முத்திரை வசனத்தைப் பேசியது இந்தப் படத்தில்தான்.

இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், வருகிற ஏப்ரல் 17 ஆம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். 4கே டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறார் கில்லி! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com