ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அஜித் - ஆதிக் படத்தின் பூஜை!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2024, 10:23 am

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து  நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அங்கு 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் நடிகை த்ரிஷாவும் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்.

விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், பொங்கல் அன்று இப்படத்திற்கான அலுவலக பூஜை சென்னையில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் - ஆதிக் கூட்டணி உறுதியாகியுள்ளது.

மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.