மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜன.25 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: ’தினசரி விட்டமின்கள்...’ வைரலாகும் மாளவிகா மோகனன்!
மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசரை வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிக பொருள்செலவில் உருவான இப்படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பல திரைகளில் வெளியாகக் காத்திருக்கிறது. மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

