தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஹனுமான் படக்குழுவினர் வழங்கிய நன்கொடை எவ்வளவு?

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஹனுமான் படக்குழுவினர் வழங்கிய நன்கொடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2024, 9:34 am

DIN

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஹனுமான் படக்குழுவினர் வழங்கிய நன்கொடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான்.   

Story image

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீமதி சைதன்யா வழங்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12 ஆம் தேதி வெளியானது.

தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் திரைப்படம் உலகளவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Story image

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

ஹனுமான் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்களில் இருந்தும் ரூ.5 ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்க இருப்பதாக ஹனுமான் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இதுவரை விற்கப்பட்ட 53,28,211 டிக்கெட்டுகளில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ. 2,66,41,055  நன்கொடை வழங்கியுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.