டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

குட் பேட் அக்லி பல திரைகள் ஹவுஸ்ஃபுல்!

குட் பேட் அக்லி முன்பதிவு குறித்து...

News image
Updated On :9 ஏப்ரல் 2025, 5:40 am

DIN

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் நாளை (ஏப். 10) திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

அஜித்துடன் நடிகர்கள் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜுன் தாஸ், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில நாள்களுக்கு முன் துவங்கிய நிலையில், சென்னையில் பல திரைகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளன.

அதேபோல், முக்கிய நகரங்களிலுள்ள மல்டி ஃபிளக்ஸ் திரைகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதால் குட் பேட் அக்லி முதல் நாளில் பெரிய வசூலை நிகழ்த்தும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.