

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலரும், திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. உள்ளிட்ட திமுக்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு பூத்துக்கு 10 பேர் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளிலிருந்து மொத்தம் 1.25 லட்சம் பேர் சீருடையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்காக செங்கிப்பட்டி பகுதியில் ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பிரம்மாண்டமான மேடை, அரங்கம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைத்து வெகு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடலுக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், மகளிர் அனைவரும் எழுந்து நின்று திமுக கொடிகளை காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதல்வர் வருகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி ஜனவரி 26-ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.