நடிகை ரஜிஷா விஜயன் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.
தமிழ், மலையாளத்தில் நாயகியாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன். 2016-ல் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஜெய் பீம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
தொடர்ந்து, தி ஃபால்ஸ் ஐ (the false eye), கோ கோ (kho kho), லவ்ஃபுல்லி யுவர்ஸ் வேதா (lovefully yours veda) ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான டொபின் தாமஸைக் காதலிப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையே, ரஜிஷாவின் உடல் நிலை பிரச்னைகளால் அவரது எடை அதிகரித்தபடியே இருந்தது.
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாகக் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டால் 15 கிலோ வரை எடையைக் குறைத்து மெலிதான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவருடைய உடற்பயிற்சியாளர் பகிர்ந்த புகைப்படங்களைக் கண்ட ரசிகர்கள், ரஜிஷாவைப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: திருநங்கை நடிகர்... சவுதியில் மரண மாஸ் படத்துக்குத் தடை!