
ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர், புதிய வகை ஸ்லீக் லம்போகினி வகை காருக்கு உரிமையாளராகியிருக்கிறார்.
இந்த சொகுசு காரின் விலை ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரையில் மாநிலத்துக்கு ஏற்ப விற்பனையாகி வருகிறது.
இந்த விலை உயர்ந்த கார் ஜான்வி கபூருக்குக் கிடைத்திருப்பது எப்படி என்பதுதான் சுவாரஸ்யமான தகவல். அவரது மிக நெருங்கிய தோழி அனன்யா பிர்லா, ஜான்விக்கு இதனை பரிசாக வழங்கியிருக்கிறார்.
ஜான்விக்கு குறிப்பாக காரைப் பரிசளிக்கக் காரணம், அவருக்கு விலை உயர்ந்த கார்கள் மிகவும் பிடிக்கும் என்பதுதான்.
சொகுசு கார், ஜான்வி கபூர் வீட்டு வாயிலில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கார் சும்மா வந்துவிடவில்லை. அதில் ஒரு மிகப்பெரிய பரிசுப் பெட்டி இருந்தது. அதில், அன்புடன் அனன்யா பிர்லா என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
அனன்யா பிர்லா, குமார மங்கலம் பிர்லா - நீர்ஜா பிர்லாவின் மகளாவார். இவரும் ஜான்வியும் பல ஆண்டுகளாக தோழிகளாக உள்ளனர்.