குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் பலரும் மறுமுறையும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடியை வசூலித்தது. இந்த நிலையில், இப்படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









