சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

புதிய தொடக்கம்.... அமீர் - பாவனி திருமணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது.

News image

அமீர் - பாவனி திருமணம் - இன்ஸ்டாகிராம்

Updated On :20 ஏப்ரல் 2025, 3:45 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது.

நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இது குறித்த படங்களை அமீரும் பாவனியும் சமூக வலைதளப் பங்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்குபெற்ற அமீரும் பாவனியும் நீண்ட காலமாக காதலித்துவந்த நிலையில், இன்று அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலரும் காதல் பலவும் டிஆர்பிக்காக செய்யப்படும் நாடகம் என பேசப்படும் நிலையில், அமீர் - பாவனி ஜோடி இதற்கு விதிவிலக்காக மாறியுள்ளனர்.

இருவரும் தொடர்ந்து தங்கள் துறைகளில் அடுத்தடுத்து நடித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமண நாளை அறிவித்தனர். அதன்படி இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

விமர்சனங்களைக் கடந்த காதல்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற பாவனியிடம், வைல்ட்கார்டு மூலம் நுழைந்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார்.

பிக் பாஸ் டிஆர்பிக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சிக்கு பின்னரும் பாவனி மீது அதே அளவு அமீர் காதல் கொண்டிருந்தார்.

ரியாலிடி நிகழ்ச்சி மேடையில் அமீர் வெளிப்படுத்திய காதலை பாவனி ஏற்றுக்கொண்டார். தங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி முடிவெடுக்கும் தருணத்தில் இருவரும் நெகிழ்ச்சியாக அந்த மேடையைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில், இருவரும் கொண்டிருந்த அன்பு மற்றும் முறையான பயிற்சியின் மூலம் அந்த நிகழ்ச்சியின் வெற்றி பெற்ற ஜோடியானார்கள்.

இதனால் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் இருவரின் காதலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைத்தது.

இருவரும் இணைந்து நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரின் பாத்திரங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.

நடிகை பாவனி சமீபத்தில் ஓம் காளி ஜெய் காளி என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார். விமல் உடனான பாவனியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சின்ன திரை நடிகையான பாவனி, ரெட்டை வால் குருவி தொடரில் தமிழில் அறிமுகமானார். இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் 3 தொடர்களில் பாவனி நடித்திருந்தார்.

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாசமலர், சின்னத் தம்பி, நீலக்குயில், ராசாத்தி உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதேபோன்று, தொழில்முறை நடனக் கலைஞரான அமீர், நடனத்தில் முழுவதும் கவனம் செலுத்திவருகிறார்.

இருவரும் தங்கள் துறையில் பயணித்துவரும் நிலையில், ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று திருமணம் செய்துகொண்டனர்.

சமூக வலைதளங்களில் புதுமண ஜோடிகளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.