சூர்யவம்சம் படக் காட்சியை மேடையில் அரங்கேற்றிய மணிமேகலை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியில் சூர்யவம்சம் படக் காட்சியை நடிகை மணிமேகலை அரங்கேற்றினார்.
சரத்குமாருடன் மணிமேகலை
சரத்குமாருடன் மணிமேகலைஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியில் சூர்யவம்சம் படக் காட்சியை நடிகை மணிமேகலை அரங்கேற்றினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சரத்குமார் தனது குடும்பத்துடன் பங்கேற்றிருந்த நிலையில், நகைச்சுவை உணர்வுடன் மணிமேகலை செய்த செயல் பலரைக் கவர்ந்தது.

சூர்யவம்சம் படத்தில் மாமனாராக வரும் சரத்குமாரிடன் ஆட்சியரான தேவையானி, எதேர்ச்சையாக கீழே விழுந்த பொருளை எடுப்பதைப் போன்று அவரிடம் ஆசி பெறுவார். இதனை மேடையில் மணிமேகலை செய்ததும் பலரும் கைகளைத் தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

சரத் குமாரும் அவருடன் மேடையில் இருந்த வரலட்சுமி மற்றும் அவரின் கணவர் உள்ளிட்டோர் இந்தக் காட்சியைக் கண்டு ரசித்தனர்.

பின்னர் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது என்ற பாடலுக்கு அப்படத்தில் வருவதைப் போன்று அனைவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு நடனமாடினர்.

இதில் சரத் குமார், தனது மருமகனின் கைகளைப் பற்றிக்கொண்டு நடனமாடியது பலரைக் கவர்ந்தது. தனது கணவரும் தந்தையும் கைகளைக் கோர்த்துக்கொண்டு நடனமாடுவதைக் கண்டு வரலட்சுமி சரத் குமார் நெகிழ்ச்சி அடைந்தார்.

மேடையில் நெகிழ்ச்சி...
மேடையில் நெகிழ்ச்சி...இன்ஸ்டாகிராம்

மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த காணொலி பலரால் பகிரப்பட்டு வருகிறது. 'சின்ராசு ஐயாகிட்ட ஆசி வாங்கியாச்சு; மணி அக்கா 10 பஸ் எப்போ வாங்கப்போறீங்க..' என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வார இறுதி நாள்களில் ஒளிபரப்பாகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்குகிறார்.

இதையும் படிக்க |சின்ன திரை நடிகைக்கு தாலி கட்டிய மற்றொரு நடிகை!

இதையும் படிக்க | புதிய தொடக்கம்.... அமீர் - பாவனி திருமணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com