வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜெயிலர் - 2 படத்தில் பான் இந்திய பிரபலங்கள்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர் - 2 குறித்து...

News image
Updated On :25 ஏப்ரல் 2025, 6:38 am

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பை முடித்தபின் இயக்குநர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் இப்பாகத்திலும் நடிக்கின்றனர்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவை அருகே உள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதியில் துவங்கியுள்ளது. அங்கு, சில முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. முதல் பாகத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இப்பாகத்தில் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.