மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ரெட்ரோ!

ரெட்ரோ டிக்கெட் முன்பதிவு குறித்து....

News image
Updated On :30 ஏப்ரல் 2025, 8:18 am

DIN

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துக்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரெட்ரோ திரைப்படத்தின் மீதான ஆவல்கள் அதிகரித்தபடியே இருந்தன.

கடந்தாண்டு துவங்கிய படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி உள்பட பல பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. ஆனால், படப்பிடிப்பு முடிந்தும் சில மாதங்கள் வரை படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இறுதியாக, இப்படம் நாளை (மே. 1) வெளியாகிறது. கங்குவா படத்தின் தோல்வியிலிருந்து சூர்யா மீண்டு வர வேண்டும் என்பதற்காக அவரின் ரசிகர்கள் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஆன்லைன் வாயிலாக படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. சென்னை உள்பட பல நகரங்களில் முதல் நாள் காட்சிகள் பெரும்பாலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளதால் படம் நன்றாக இருந்தால் அதிக வசூலை ஈட்டவும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.