நடிகர் கமல் ஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
விக்ரம் வெற்றிக்குப் பின் நடிகர் கமல் ஹாசனுக்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கல்கி ஏடி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 150 கோடி சம்பளம் பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் - 2, தக் லைஃப் திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களைப் பெற்றுத் தோல்விப்படமாகின.
தற்போது, மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் வெளிச்சம் படர்ந்த புகைப்படத்தை வெளியிட்டு, “நான் உள்ளிருந்தும் ஒளிர்கிறேன். ஆசான்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
இப்பதிவைக் கண்ட ரசிகர்கள், “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே” என்கிற கமல் வசனத்தைக் குறிப்பிட்டு உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.