மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இரண்டு துருவங்கள் ஒன்றிணைகையில்..! ரஜினி - கமல் படத்தின் புதிய அப்டேட்!

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அடுத்த அப்டேட்...

நடிகர்கள் கமல், ரஜினி - (கோப்புப் படம்)

Published On :

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முதன்மை நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை “ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்” நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்தப் படத்தை, இயக்குநர் நெல்சன் இயக்குவதாகவும், அதற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவை மிகுந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்குவதாகக் கூறப்படுவது திரைப்பட ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை வியாழக்கிழமை (பிப். 19) மாலை 7.12 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

மேலும், வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் 21.02.2026 எனும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதால், வரும் சனிக்கிழமை (பிப். 21) இந்தப் படத்தின் புரோமோ விடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரின் பிறந்த நாள் தேதிகளைக் குறிப்பிடும் விதமாக 12 மற்றும் 7 ஆகிய எண்களைக் கொண்ட நேரங்களில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படுகின்றது.

Summary

A new update has been released for the film starring actors Rajinikanth and Kamal Haasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.