கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தின் புதிய அப்டேட்...
Gopi - Sudhakar
கோபி - சுதாகர்படம்: யூடியூப் / சரிகம தமிழ்
Published on
Updated on
1 min read

கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை கோபி, சுதாகர் ஈர்த்துள்ளார்கள்.

இவர்களின் தனித்துவமான நகைச்சுவை விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதுடன் மீம்ஸ்களாக மாறி இணையத்தில் வைரலாகும்.

இவர்கள் இருவரும், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள்ளது.

இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்க, பரிதாபங்கள் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. இதில், அவர்கள் மீதான விமர்சனங்களை கிண்டல் செய்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் வெளியான இவர்களது சொசைட்டி பாவங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Summary

The promo video of the first song of the film 'Oh God Beautiful' starring Gopi and Sudhakar has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com