சுரேஷ் கோபி நடிப்பில் உருவான ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்துக்கு, “ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” (Janaki vs State Of Kerala) எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இதில், ஜானகி என்பது சீதையின் மறுபெயர் எனக் கூறி அப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுத்தது.
இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்ற விசாரணையில், அந்தப் படத்தின் பெயரை மாற்றுவதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.
அதனால், படத்திற்கு ”ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” எனப் பெயர் மாற்றப்பட்டு ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து படமான இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.