மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி குறித்து...
மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!
Published on
Updated on
1 min read

சிறகடிக்க ஆசை தொடர் நாயகி கோமதி பிரியா, மலையாள மொழியில் எடுக்கப்படும் மகாநதி தொடரில் இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.

 சச்தேவ் பிள்ளை - கோமதி பிரியா
சச்தேவ் பிள்ளை - கோமதி பிரியா

தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டும் சகோதரிகளுக்கும் அவர்களது கணவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியும் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாநதி தொடர் மலையாள மொழியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இந்தப் புதிய தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக சச்தேவ் பிள்ளை நடிக்கவுள்ளார்.

தமிழில் விஜய் - காவேரி (லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) நடிக்கும் பாத்திரங்களில் கோமதி பிரியா - சச்தேவ் நடிக்கவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் லஷ்மிபிரியா - சுவாமிநாதன் இணை, மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், கோமதி பிரியா - சச்தேவ் இணையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய தொடர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Gomathi Priya, the heroine of the series Siragadika Aasai, has joined the Malayalam language series Mahanadhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com