ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

விஷ்ணு விஷாலின் ஆர்யன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

ஆர்யன் திரைப்படம் போஸ்டர்

Published On :

நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இறுதியாக நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ”கட்டா குஸ்தி” எனும் திரைப்படம் வெளியானது.

அதன்பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ”லால் சலாம்” மற்றும் ”ஓஹோ எந்தன் பேபி” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான “ஆர்யன்” வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு இன்று (ஆக.29) அறிவித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள இப்படம் வெளியாகவுள்ளது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிக்க: பாம் திரைப்பட டிரைலர்!

Summary

The release date of the film 'Aaryan' starring actor Vishnu Vishal has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.