
நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று (ஆக.29) வெளியிட்டுள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பாம்”.
டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் காளி வெங்கட், நாசர், சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே, ஷிவாத்மிகா ராஜசேகர், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும், இந்தப் படத்தின் டிரைலரை படக்குழு இன்று (ஆக.29) வெளியிட்டுள்ளது. காளகம்மாய்பட்டி எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்ட நசைச்சுவை திரைப்படமாக இது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சில வாரங்கள் முன்பு வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ‘இன்னும் எத்தனை காலம்’ எனும் பாடல் ஆகியவை ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.