

லண்டனில் லெய்ஷ்சர் சதுக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நடிகை கஜோலின் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை திறந்து வைத்த ஷாருக்கான் - கஜோலின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
யஷ் சோப்ரா தயாரிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நடிகை கஜோல் நடித்த தில்வாலே துல்கானியா லே சாயேங்கே திரைப்படம் 1995-இல் வெளியானது.
இந்தியாவிலேயே அதிக நாள்கள் (27 ஆண்டுகள்) திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன் முப்பதாம் ஆண்டு விழாவில் இந்த வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இங்கு ஹாரி பார்டர், மாரி பாபின்ஸ், படிங்டன், சிங் இன் தி ரெயின் ஆகிய படங்களுக்காக சிலை வைக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக இந்தச் சதுக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த திரைப்படம் ஒன்றிற்காக சிலை வைகப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.