

பிரபல பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் வெளியீட்டுத் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஸ்டீவன் நைட் எழுதிய கதைகளின் அடிப்படையில் உருவான பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்களுக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில், முதலாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடைபெறும் வரலாற்று கதைகளத்துடன் கூடிய பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்களின் அடிப்படையில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “தி இம்மோர்டல் மேன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடரின் நாயகனான ஆஸ்கர் விருது வென்ற நடிகர் சிலியன் மர்ஃபியின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் “தி இம்மோர்டல் மேன்” திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கடின உழைப்பின் அடையாளம்... 23 ஆண்டுகளுக்குப் பிறகான ரேஸிங் அனுபவம் பகிர்ந்த அஜித்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.