

நடிகை கீர்த்தி ஷெட்டி கார்த்தி உடனான அனுபவம் குறித்து பேசும்போது மீம்ஸ்களில் வருவதுபோல், “நான் ஃபேனில் இருந்து ஏசி ஆகிவிட்டேன்” எனப் பேசினார்.
இவரது நேர்காணல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி உடன் கீர்த்தி ஷெட்டி வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் வரும் டிச.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கார்த்தி உடன் நடித்தது குறித்து தனது அனுபங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் கீர்த்தி ஷெட்டி பேசியதாவது:
பையா படம் மிகவும் பிடிக்கும்...
நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை. பையா படத்தை எத்தனை முறை பார்த்தேன் எனத் தெரியாது.
என் சிறிய வயதில், மங்களூரில் இருக்கும் எனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு நண்பர்கள் இல்லை, அதனால் வீட்டில் டிவி மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது.
அங்கிருந்த பையா படத்தைப் சிடியில் போட்டு நாள் முழுக்க பார்த்தேன். என்ன பிடித்தது எல்லாம் தெரியவில்லை. திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருந்தேன்.
கார்த்தி, தமன்னாவின் நடிப்பு க்யூட்டாக இருந்தது. பாடல்களும் பிடிக்கும்.
கார்த்தி சாரின் ஃபேன் அல்ல, ஏசி...
ஒருமுறை லிங்குசாமியிடம் கார்த்தியைப் பார்க்கலாம் எனக் கேட்டு காத்திருந்து நடக்கவில்லை. அதனால், மிகுந்த மனம் உடைந்தேன்.
பிறகு நதியா மேடம் எனக்காக கார்த்தி சாரிடம் ஃபேன் செய்து கொடுத்தார். நான் மிகப்பெரிய ரசிகை எனப் பேசினேன். அவரும் நன்றாகப் பேசினார்.
அடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வா வாத்தியார் படப்பிடிப்பில் அவரே என்னிடம் வந்து, ‘நாம் பேசியிருக்கிறோமே ஞாபகம் இருக்கிறதா?’ எனக் கேட்டார்.
முதலில் அவருடன் நடிக்க பயமாக இருந்தது; அதேசமயம ஆர்வமாகவும் இருந்தது.
ஒன்று சொல்லுவேன். அது கிரிஞ்சாக இருக்கும். நான் இப்போது கார்த்தி சாரின் ஃபேனில் (ரசிகை) இருந்து ஏசியாக மாறிவிட்டேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.