

மலேசியாவில் நடிகர் அஜித்தை நடிகர் சிம்பு சந்தித்து பேசினார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் மீது தனக்கு சிறிய வயதில் இருந்தே தீவிரமான ரசிக மனப்பான்மை இருந்துள்ளது என சிம்பு பல மேடைகளில் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் சினிமாவிலும் கார் ரேஸிங்கிலும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
தற்போது மலேசியாவில் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். அவரது அணி மலேசியாவில் மூன்றாம் இடம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர் சிம்புவும் மலேசியாவில் கடை திறப்பு ஒன்றுக்குச் சென்றிருந்தார். அதை முடித்ததும் கார் ரேஸிங் உடை அணிந்து நடிகர் அஜித்தைச் சந்தித்து பேசினார்.
சிம்பு எப்போதும் தல ரசிகந்தான் என அஜித் ரசிகர்கள் இந்தப் புகைப்படங்கள், விடியோக்களை சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.