

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள எஸ்கே - 26 படத்தின், சிவகார்த்திகேயனின் தோற்றம் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக யாரை வைத்து இயக்குவார் என எதிர்பார்ப்புகள் இருந்தன.
நடிகர் அஜித்துடன் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக உறுதியான தகவல் வெளியானது.
அண்மையில் இயக்குநர் வெங்கர் பிரபு பேசும்போது, “நடிகர் சிவகார்த்திகேயனுடனான திரைப்படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும். கதையைக் கேட்ட அவரும் தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுவரை பார்க்காத எஸ்கேவை இப்படத்தில் பார்க்கலாம்.” எனத் தெரிவித்து இருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் புதிய திரைப்படத்தில் இவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் சிவகார்த்திகேயனின் தோற்றம் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: காந்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.