
காந்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
காந்தா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தா போஸ்டர்.
காந்தா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரின் நடிப்பில் கடந்த நவ. 14 ஆம் தேதி காந்தா திரைப்படம் வெளியானது.
பீரியட் கால கதையாக உருவான இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இருந்தாலும், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இப்படம் 3 நாள்களில் ரூ. 24 கோடியை வசுலித்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், காந்தா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!
Summary
The OTT release date of the film Kantha has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






