

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகள் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு விஜய்யுடன் போட்டிதான் என்பதை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்தப் படம் தொடக்கத்தில் ஜன.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன.10ஆம் தேதி வெளியாகுமென புரோமோவை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசியான திரைப்படமாக உருவாகியுள்ள ஜன நாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.