

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக் கொண்டு செல்லக்கூடாத பொருள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் நாளை (டிச. 27) நடைபெறவுள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அரசியல் பேச்சு மற்றும் விமர்சனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு வகையான பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறியீடுகள், கூறுகள் அல்லது ஏதோவொரு வடிவத்தில் அரசியலைக் குறிப்பதாய் இருக்கும் டி-சர்ட், விசிறி, தலைப்பாகை, பேட்ஜ், குடை, கொடி, போஸ்டர் என எதுவாக இருந்தாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அல்லது பாதுகாவலர்களால் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், உணவுப்பொருள்கள், மது வகைகள், கேமராக்கள், ட்ரோன், ஹீலியம் பலூன்கள், ஸ்கேட்போர்டு, ஸ்டிக்கர்ஸ், இசைப்பான்கள், கண்ணாடிப் பொருள்கள், வளர்ப்புப் பிராணிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள், பந்து போன்ற பலவகையான பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.