

நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படத்தின் 3 ஆவது பாடலின் முன்னோட்டம் (புரோமோ) வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள “ஜன நாயகன்” திரைப்படம், வரும் ஜன.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் “தளபதி கச்சேரி” மற்றும் “ஒரு பேரே வரலாறு” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், ”ஜன நாயகன்” படத்தின் மூன்றாவது பாடலான “செல்ல மகளே” எனும் பாடல் வெள்ளிக்கிழமை (டிச. 26) மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
மேலும், “ஜனநாயகன்” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் டிச.27 அன்று மலேசியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மறுதணிக்கைக்குச் சென்ற பராசக்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.