

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனக்கு சகோதரர் போன்றவர் என்று இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெல்சன் பேசுகையில் "பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், ஒவ்வொரு நாளும் விஜய் என்னை அழைத்தார். என் மீது கோபமாக இருக்கிறாரா என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு, உங்களுடனான எனது நட்பை ஒரு படம்தான் தீர்மானிக்கிறதா? என்று விஜய் கேட்டார்.
அவருடன் எனக்கு தனிப்பட்ட பிணைப்பும் அன்பும் இருக்கிறது. விஜய் எனக்கு சகோதரர் போன்றவர்" என்று தெரிவித்தார்.
ஜன நாயகன், விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இசை வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகரும் ஒரு பாடல் பாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.