எதிர்நீச்சல் இயக்குநருக்குக் குவியும் வாழ்த்துகள்!
எதிர்நீச்சல் தொடரை இயக்கிவரும் இயக்குநர் திருச்செல்வத்துக்கு பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ஹரிபிரியா இசை பகிர்ந்துள்ள படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் 2 தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிவருகிறது.
இத்தொடரில் மதுமிதா நாயகியாக நடித்துவந்த நிலையில், அவருக்கு பதிலாக தற்போது பார்வதி நடித்து வருகிறார். மற்ற பாத்திரங்கள் அனைவரும் எதிர்நீச்சல் 2ஆம் பாகத்திலும் தொடர்கின்றனர்.
எதிர்நீச்சல் தொடரை எடுத்துவரும் திருச்செல்வம், சேர் டிக்கெட் என்ற யூடியூப் சேனலையும் சமீபத்தில் தொடங்கினார். இதில் தனது திரை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதாகவும், தன்னிடமுள்ள கதைகளை குறும்படங்களாக எடுத்து வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இளம் கலைஞர்களுக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்துக்காகவே யூடியூப் சேனல் தொடங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மெட்டி ஒலி தொடரின் மூலம் சின்னதிரையில் அறிமுகமான (நடிகராக) இவர், கோலங்கள் தொடரின் மூலம் இயக்குநராக மாறினார்.
தொடர்ந்து சித்திரம் பேசுதடி, அல்லி ராஜ்ஜியம், வல்லமை தாராயோ, மாதவி, பொக்கிஷம், கைராசிக்குடும்பம் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார். தற்போது எதிர்நீச்சல் தொடரின் மூலம் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடருக்காக சிறந்த இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் திருச்செல்வத்துக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சிறிய அறைக்கு மாத வாடகை ரூ. 25,000! வைரலாகும் விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.