தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஹிந்தியில் படுதோல்வியடைந்த லவ் டுடே ரீமேக்!

லவ் டுடே ஹிந்தி ரீமேக் தோல்வியடைந்துள்ளது...

News image
Updated On :19 பிப்ரவரி 2025, 10:34 am

லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லவ் டுடே. காதலில் இருந்துகொண்டே உறவை மதிக்காத காதலர்களின் பிரச்னையை நகைச்சுவையுடன் பேசிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூலித்து அசத்தியது. தொடர்ந்து, இப்படத்தின் பிறமொழி ரீமேக் உரிமையை தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு பெற்றன. அதில், ஹிந்தியில் இப்படம் லவ்யபா (loveyapa) என்கிற பெயரில் ரீமேக்கானது.

நாயகனாக நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைத் கானும் நாயகியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் நடித்திருந்தனர். கடந்த பிப். 7 ஆம் தேதி வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனால், ரூ. 65 கோடியில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 10 கோடிகூட வசூலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.