பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மகா கும்பமேளாவில் வெளியாகும் தமன்னா பட டீசர்!

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் டீசர் வெளியீடு குறித்து...

தமன்னாவின் புதிய பட போஸ்டர்.

Published On :

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் டீசர் மகா கும்பமேளாவில் வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

தமிழில் 'அரண்மனை 4' படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் 2 ஹிந்திப் படங்கள், ஒரு தெலுங்குப் படமான ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார். இதை அசோக் தேஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர், மேக்கிங் விடியோ வெளியாகி கனவம் பெற்றது. முதல் முறையாக தமன்னா இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒடேலா முதல் பாகம் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய த்ரில்லர் படம் ஆஹா ஓடிடியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இந்த நிலையில், படத்தின் டீசர் பிப்.22ஆம் தேதி மகா கும்ப மேளாவில் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நகரில், உலகப் புகழ்பெற்ற கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தமன்னாவின் புதிய பட போஸ்டர்.

தமன்னாவின் புதிய பட போஸ்டர். - படம்: எக்ஸ் / அசோக் தேஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.