

ஜப்பான் அனிமேஷன் பாணியில் உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ராமாயணா : தி லெஜென்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை யூகோ சகோ கருத்துருவாக்கத்தில் கொய்ச்சி சஷாகி, ராம் மோகன் இயக்கியுள்ளார்கள்.
இதில் 450 கலைஞர்கள் இணைந்து சுமார் 1,00,000 கையினால் வரைந்த படங்களை உபயோகித்துள்ளார்கள். இதன் முடிவுகள் மிகவும் அழகாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் ஜன.24ஆம் தேதி 4கே தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இதன் டிரைலர் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் அகர்வால், சிபி கார்த்திக், டமோட்ஸு கோஸ்னோ ஆகியோர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.
ஜீகி பிக்சர்ஸ், ஏஏ ஃபிலிம்ஸ், எக்ஸெல் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து இதனை வெளியிடுகிறார்கள்.
ரன்பீர், யஷ் நடிப்பில் ராமாயணம் படம் உருவாகிவருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.