

நடிகைகள் பூமிகா, சாரா அர்ஜுன் நடித்துள்ள யூபோரியா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ருத்ரமாதேவி பட இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
நீலிமா குணா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் வழக்கம்போல இந்தப் படத்தில் காவலதிகாரியாக நடித்துள்ளார்.
போட்டித்தேர்வுக்குப் படித்திருக்கும் ஒர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் துரந்தர் படத்தில் சாரா அர்ஜுன் நடிப்பு கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.