இந்தியளவில் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் லட்சங்களில், கோடிகளில் சம்பளம் பெறும் நடிகைகளைப் பார்த்திருக்கிறோம். ஏன், ஒரே ஒரு விளம்பரத்திற்காகக் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் நடிகைகளும் உள்ளனர்.
ஆனால், தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? ரூ. 18 லட்சம். இவ்வளவு தொகையை வாங்கும் நடிகை வேறு யாரும் அல்ல, இன்ஸ்டாவில் 50 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி (jannat zubair rahmani).
இதையும் படிக்க: 'நான் ஆணையிட்டால்...’ ஜன நாயகன் 2-வது போஸ்டர்!
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இவருக்கு 23 வயதுதான் ஆகிறது. ஆனால், இந்த வயதிற்குள்ளாகவே மிகப்பெரிய நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலும் சீரியல்களில் சிறப்பு தோற்றங்களில் நடிக்கிறார். இவர் நடித்த து ஆஷிகி (tu ashiqui), ஆப் கே ஆ ஜனே சே (aap ke aa jane se) தொடர்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவை.
தற்போது, சீரியலில் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவரே இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.