மாரி 2 தொடரில் இணையும் பிரபலங்கள்!

மாரி 2 தொடரில் நடிகர் சுர்ஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோன்று நடிகர் இந்திரனும் நடிக்கவுள்ளார்.
சுர்ஜித் / இந்திரன்
சுர்ஜித் / இந்திரன்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

மாரி 2 தொடரில் நடிகர் சுர்ஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோன்று நடிகர் இந்திரனும் நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மாரி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகியாக நடித்துவந்த நடிகை ஆஷிகா விலகுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு பதிலாக அஞ்சனா ஸ்ரீநிவாஸன் நடிக்கிறார்.

நாயகனாக நடித்து வந்த ஆதர்ஷும் மாரி தொடரில் இருந்து விலகியதால், அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சுகேஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆஷிகா / ஆதர்ஷ்
ஆஷிகா / ஆதர்ஷ்இன்ஸ்டாகிராம்

அமானுஷ்ய காட்சிகள் நிறைந்தது மாரி தொடர். இதில், மாரி இறந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு பெண்ணின் உடலில் மீண்டும் வருவது போல கதை மாற்றப்பட்டுள்ளது.

கதையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இது இரண்டாம் பாகம் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே இத்தொடரில் பல புதிய பாத்திரங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் சின்ன திரையில் பிரபலமான சுர்ஜித் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

சன் தொலைக்காட்சியின் புதுவசந்தம், பாண்டவர் இல்லம், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் யாரடி நீ மோகினி ஆகிய தொடர்களில் இவர் துணை பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் சத்யா, ஸ்ரீகுமார் நடிக்கும் புதிய தொடர்!

இதேபோன்று நடிகர் இந்திரனும் மாரி 2 தொடரில் நடிக்கவுள்ளார். கார்த்திகை தீபம், மலர், சத்யா, என்றென்றும் புன்னகை ஆகிய தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

மாரி 2 தொடரில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.