புதிய முயற்சி: ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் மகாநதி தொடர்!

மகாநதி தொடர் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படுவது தொடர்பாக....
மகாநதி தொடர்.
மகாநதி தொடர்.
Published on
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 6) ஒளிபரப்பாகவுள்ளது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் தொடர் மகாநதி. இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

இத்தொடரில் நடிக்கும் விஜய் - காவேரிக்கு(லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) இணைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இத்தொடரில் அடுத்தடுத்து நடக்கவுள்ள சுவாரசிய சம்பவங்களை மையப்படுத்தி சிறப்புக் காட்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) மாலை 5 முதல் 6.30 வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இந்த சிறப்புக் காட்சி ஒளிபரப்பானது இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்துதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் அய்யனார் துணை தொடரின் சிறப்புக் காட்சி ஒளிபரப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தையடுத்து, இந்த வாரம் மகாநதி தொடரை ஒளிபரப்பு செய்ய சேனல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Summary

The Mahanadi series, which airs on Vijay TV, will also be aired on Sunday this week (July 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com