மகாநதி தொடரிலிருந்து முக்கிய பிரபலம் விலகல்!

மகாநதி தொடரிலிருந்து நடிகை ஆதிரை விலகல் தொடர்பாக....
மகாநதி தொடரிலிருந்து முக்கிய பிரபலம் விலகல்!
Published on
Updated on
1 min read

மகாநதி தொடரில் இருந்து யமுனா பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை ஆதிரை அத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.

தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டும் சகோதரிகளுக்கும் அவர்களது கணவர்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தியும் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஆதிரை
ஆதிரை

இந்த நிலையில், மகாநதி தொடரில் இருந்து நடிகை ஆதிரை விலகியுள்ளார். இது தொடர்பாக மகாநதி தொடரின் இயக்குநர் பிரவீன் பென்னட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “ஆள் மாற்றப்படுகிறது, என்ன பன்றது, என்னால் தவிர்க்க முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தொடரில் ருத்ரன் பிரவீனுக்கு ஜோடியாக நடிகை ஆதிரை நடித்துவந்தார். இவர்களின் இணைக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது, நடிகை ஆதிரை இத்தொடரில் இருந்து விலகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆதிரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Actress Aadhirai, who played the role of Yamuna in the Mahanadi serial, has quit the series.

இதையும் படிக்க:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com